Thursday, 28 February 2008

பச்சைமரமும் பட்டமரமும் பேசிக்கொண்டன



பச்சைமரம்:கடுமையான குளிர், பலத்த காற்று என்று மனிதர்கள் பேசிக்கொள்கிறார்களே, எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு இந்த குளிரில், பனிக்காற்றில் எப்படிதான் உயிர்வாழ்கிறாயோ? அய்யோ பாவம்!

பட்டமரம்:நான் வசந்தத்தில் துளிர்ப்பேன்.. ஆனால் நீ மட்டும் எப்போதும் அந்த கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய். உனக்கு தென்றலின் மென்மையும் தெரியாது, புயலின் வன்மையும் தெரியாது.

பச்சைமரம்:நான் எப்போதும் ஒரே மாதிரி எந்த துன்பமும் இன்றி உயிர்வாழ்கிறேன்

பட்டமரம்:நான் இயற்கயோடு இன்பமாய் வாழ்கிறேன், உன்னைப்போல் செயற்கை வாழ்வு எனக்கில்லை.

பட்டமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த கண்ணாடிச் சுவருக்குள் நிம்மதியாக துன்பமின்றி வாழ ஆசைதான். ஆனாலும் பச்சை மரத்திடம் என்னால் விட்டுகொடுக்க முடியவில்லை'

பச்சைமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த இயற்கோடு கலந்த இன்ப/துன்ப வாழ்வு வாழ ஆசைதான், ஆனாலும் பட்டமரத்திடம் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்.

12 comments:

Girl of Destiny said...

தமிழ்... நீயா? நீயாடி இது?? உனக்குள்ள இவ்ளோ ஆழமா??
ரொம்ப ரொம்ப அருமையா எழுதியிருக்க... அதுவும் முடிவுல ரெண்டு மரமும் மனசுல நெனைச்சிக்கறதை நமக்கு பொருத்தி பார்த்தேன்...அசந்துட்டேன்!

தேன்மொழி said...

hey nice concept d.. but "Pachamaram " ku bathil vera per koduthirukalam... to sayt about that artiificial or indoor plants

KARTHIK said...

முடிவ என்ன சொல்லவரிங்க தமிழ்.
(பட்டமரம்)இக்கரைக்கு அக்கறை (பச்சைமரம்)பச்சையதான் தெரியும்னு சொல்ரிங்கள!.
நல்லாருக்கு.

tamizh said...

--To GirlOfDestiny
ya.. நானேதான்.. எந்த ஒரு கருத்தின், ஆழமும் அதை உள்வாங்கிகொள்வோரின் ஆழத்தை பொறுத்துதுதான்! You see what u are, that may not be me(sorry for the mokkai) ..

//நமக்கு பொருத்தி பார்த்தேன்...அசந்துட்டேன்! //
:) கார்த்திக் சொன்ன மாதிரி தான் அக்கரைக்கு இக்கர பச்சை

your expressive comment boosts my confidence! thanks de!

--To thenmozhi
பாராட்டுக்கு நன்றி தேன்!
They are indoor plants only. I dono the word for that de.. நான் இரண்டு மொழிகளிலுமே அறைகுறைதான். You tell me.

--To Karthik
சரியாகச் சொன்னீர்கள்! அதேதான்!

//நல்லாருக்கு//
நன்றிகள் பல!

KARTHIK said...

தமிழ்
உங்கள் புகை படங்கள் மிகவும் அருமையாக உள்ளது.
PIT பற்றி உங்களுக்கு தெரியுமா.
இந்த மாதம் நடக்கும் போட்டியில்.கலந்து கொள்ளுங்கள்.
தமிழில் புகைப்படக்கலை

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்

tamizh said...

இந்த போட்டியை அறிமுகம் செய்ததர்க்கு நன்றி கார்த்திக்!
இதில் கலந்து கொள்ள நான் மிக ஆவலாய் உள்ளேன்!

Anonymous said...

Arumai!!!!!Instead of going photographic competetion(Kodumai)...Go for imagination Comeptition....Good keep it up... Jk

வால்பையன் said...

படமும் உரையாடலும் பொருத்தமாக இருக்கிறது.
தமிழ் நன்றாக வருகிறது. தமிழிலேயே முயற்சிக்கலாமே அனைத்தையும்

வால்பையன்

வால்பையன் said...

படமும் உரையாடலும் பொருத்தமாக இருக்கிறது.
தமிழ் நன்றாக வருகிறது. தமிழிலேயே முயற்சிக்கலாமே அனைத்தையும்

வால்பையன்

tamizh said...

நன்றி வால் சிறுவனே! தமிழிலேயே தொடர்கிறேன்...

Nivi said...

romba nalla iruku :)

Anonymous said...

iru marangalin unnarvil manithanin thedalai velipaduthiya vitham viyapil althiyathu