Thursday 28 February, 2008

பச்சைமரமும் பட்டமரமும் பேசிக்கொண்டன



பச்சைமரம்:கடுமையான குளிர், பலத்த காற்று என்று மனிதர்கள் பேசிக்கொள்கிறார்களே, எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு இந்த குளிரில், பனிக்காற்றில் எப்படிதான் உயிர்வாழ்கிறாயோ? அய்யோ பாவம்!

பட்டமரம்:நான் வசந்தத்தில் துளிர்ப்பேன்.. ஆனால் நீ மட்டும் எப்போதும் அந்த கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய். உனக்கு தென்றலின் மென்மையும் தெரியாது, புயலின் வன்மையும் தெரியாது.

பச்சைமரம்:நான் எப்போதும் ஒரே மாதிரி எந்த துன்பமும் இன்றி உயிர்வாழ்கிறேன்

பட்டமரம்:நான் இயற்கயோடு இன்பமாய் வாழ்கிறேன், உன்னைப்போல் செயற்கை வாழ்வு எனக்கில்லை.

பட்டமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த கண்ணாடிச் சுவருக்குள் நிம்மதியாக துன்பமின்றி வாழ ஆசைதான். ஆனாலும் பச்சை மரத்திடம் என்னால் விட்டுகொடுக்க முடியவில்லை'

பச்சைமரம் நினைத்துகொண்டது 'எனக்கும் அந்த இயற்கோடு கலந்த இன்ப/துன்ப வாழ்வு வாழ ஆசைதான், ஆனாலும் பட்டமரத்திடம் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்.

Tuesday 26 February, 2008

படம் பார்த்து கதை சொல்லுக.

1> கோலம்

கோடுகளுக்கு இடையே இட்ட புள்ளிகளாய் நானும் இந்த உலகத்துக்கு இடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன், கோடுகளை தாண்டி வர எனக்கு பிடிக்கவில்லை

2> அம்மா

சிறிதும் கலையாத அந்த வெள்ளை மணலில்,
சின்னதாய் ஒரு கவிதை எழுத தோன்றியது.
யோசிக்காமல் எழுதி படமெடுத்துவிட்டேன்

Sunday 24 February, 2008

வாசலில்லா கோவில்



விண்ணை உரச கோபுரம் எழுப்பி,
பல வகை பூக்கள் கொண்டு,
உன்னைத் தொழ, வழியறியேன் என் இறைவா....
இந்த உதிரிப் பனியை ஒன்றாய் குவித்து, கோபுரம் எழுப்பி,
அதை சுற்றி ஒரு சுவரெழப்பி,
இங்கு முற்றிலும் காய்ந்து போய்
வசந்தத்தின் வருகைக்காக நம்பிக்கயுடன் காத்திருக்கும்,
இந்த பட்ட மரத்தில் ஒட்டியிருந்த
காய்ந்த இலைகளைக் கொண்டு உன்னைத் தொழுகிறேன்!

Sunday 10 February, 2008

My room mate

Last friday in our office they told us to work on saturday... "உழவு மாடு ஊர் சுத்தி பார்த்த கதைதான்"... And my room mate was making fun of me that friday "Hey Tamil, i will sleep happily tomorrow, you must get up, take bath and go to office, hahahaa"... i was a bit upset.. and the next day, she woke up with me and prepared tea for me, and toasted some bread slices with butter.... i was so very surprised.. Am i worth? for such a friendship.. In case if i have to stay at home and she goin to office, would i have done such things for her... லேசாக என் மனம் கணத்தது, இந்த நட்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்லி i went to office that day....

Without her permission i have put her photo here..