எங்கள் வீட்டின் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் இருந்து எடுத்த புகைப்படங்கள் இவை. அந்த சிறுவன் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து எனக்கும் அதே போல் விளையாட ஆசையாக இருந்தது. சிறிது நேரத்தில் அவனுடைய தோழர்களும் தோழிகளும் அங்கு குவிந்து விட்டனர். எல்லோரும் இதே போல் சில அட்டைகளைக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். வெகு நேர யோசனைக்கு பிறகு நானும் களமிரங்கினேன். அங்கிருந்த ஒரு சிறுவனிடம் "என்னையும் சேர்த்துகொள்கிறீர்களா" என்று கேட்டேன். நான் எதிர்பார்க்காத அளவு உற்சாகத்துடன் அவன் "கண்டிப்பாக" (sure) என்றான். இந்த புகைப்படத்தில் இருக்கும் அதே அட்டையில் நான் உட்கார்ந்துகொண்டேன். அவன் லேசாக அந்த அட்டையை தள்ளிவிட்டான், நான் சறுக்கிக்கொண்டு ஒரு மூளையில் போய் சேர்ந்தேன்.. நல்ல அனுபவம்.. லேசாக கெட்டியாகியிருந்த அந்த பனிச்சருக்கு பயணமும் மறக்கமுடியாததுதான்!
Tuesday, 20 May 2008
நினைவுகள்..
Posted by tamizh at 6:46 am
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தமிழின் திரு"விளையாடல்"களில் இதுவும் ஒன்று.
எனக்கும் மறக்க இயலாத நினைவுகள்......
தாயம், 5 கல் விளையாட்டு, செஸ் , டென்னிஸ்...:))
படங்கள் அருமை தமிழ்.
//எனக்கும் மறக்க இயலாத நினைவுகள்......
தாயம்,5 கல் விளையாட்டு,செஸ்,//
உண்மைதான் ஜெகே பலவருடங்களுக்கு பிறகு இந்த விளையாட்டுக்களைஎல்லாம்,விடுமுறைக்கு வந்திருந்த என் அக்கா பசங்களுடன் நானும் விளையாடினேன்.
// லேசாக கெட்டியாகியிருந்த அந்த பனிச்சருக்கு பயணமும் மறக்கமுடியாததுதான்!//
தமிழ்நாட்டுல அடிக்கிற வெயிலுக்கு ஏன் தமிழ் இப்படி வயிதெரிச்சளை கொட்டிகிரிங்க,
அங்க சம்மர் வரட்டும் நாங்க இமயமலை போட்டோ போடுறோம்
வால்பையன்
-> jk
:)
-> கார்த்திக்
நன்றி கார்த்திக்!
-> வால்பையன்
நானும் தமிழ்நாட்டிலதான் இருக்கேன். வெக்கை தாங்க முடியாமதான் இந்த படங்கல பார்த்து மனச சமாதான படுத்திக்றேன்.
pics are nice especially while u see it from a place so h---o---t
i mean chennai
என்ன ஆச்சு
ஏன் இவ்வளவு நாட்களாக பதிவுகள் போடுவதில்லை.
தயவுசெய்து எழுதவும்
வால்பையன்
நன்றி மின்னல்!
வால்பையன் அவர்களே நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றி! ஒரு பதிவு போட்டுளேன், என்ன எழுதுவதென்றே தெரியாமல் மீண்டும் ஒரு ஆரம்பம்!
Post a Comment